Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று பாதித்தவுடன் என்ன செய்ய வேண்டும்..? யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்லலாம்..? வழிமுறைகள் இதோ..!!

கொரோனா தொற்று லேசாக பாதித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

லேசான பாதிப்புகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு வாரத்திற்கும் அதிகமாக காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகலாம். மேலும் 60 வயதுக்கும் அதிகமானவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தால், தொற்று ஏற்படும்போது உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப்பெற வேண்டும்.

அதன்பின்பே வீட்டில் தனிமைப்படுத்தவேண்டும். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும். மேலும் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள், வெந்நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தினசரி இரண்டு தடவை ஆவி பிடிக்க வேண்டும்.

தினசரி நான்கு தடவை பாராசிட்டமால் மாத்திரை 650 மில்லி கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியும் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் தினசரி இரண்டு தடவை 250 மில்லி கிராம் நாப்ராக்சன் மாத்திரையை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்கள்.

காய்ச்சல் மற்றும் இருமல் ஐந்து வாரங்களுக்கும் மேலாக இருந்தால், புடசோனைட் மருந்தை தினசரி இரண்டு முறை ஒரு வாரத்திற்கு இன்ஹேலர் வாயிலாக உள்ளிழுக்க வேண்டும். மேலும் ரெம்டெசிவிர் என்ற மருந்து, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் தான் எடுக்க வேண்டும்.

மேலும் கொரோனா நோயாளிகளை வீட்டிலிருந்து கவனித்துக் கொள்பவர்கள் அல்லது அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள், வழிமுறைகளின்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுக்கவேண்டும். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் தண்ணீர் ஆகாரங்களை பருகவேண்டும்,3 அடுக்கு முகக்கவசம் கட்டாயமாக அணியவேண்டும்.

மேலும் அவர்கள் காற்றோட்டம் இருக்கும் அறையில் இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டவர்களை கவனித்துக்கொள்பவர்கள் N-95 முகக்கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் அறிகுறிகள் ஆரம்பித்த பத்து தினங்களுக்கு பின்பு அல்லது அறிகுறியில்லாதவர்களும், பரிசோதனை மேற்கொண்ட பத்து தினங்களுக்கு பின்பு தொடர் மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் வெளியே வரலாம். வீட்டில் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

Categories

Tech |