Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றின் போது… ஊழல் புகாரில் சிக்கிய… ஏஞ்சலா கட்சியின் உறுப்பினர் ராஜினாமா …!!!

ஜெர்மனியில் கொரோனா நோய்த்தொற்று  காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக ஏஞ்சலா  கட்சியைச் சேர்ந்தவர்  , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் .

நிகோலஸ் லோபெல்  என்ற அந்த உறுப்பினர் கொரோன  நோய்த்தொற்றின் போது அரசாங்கத்திற்கு விற்பனை செய்யப்பட்ட மாஸ்கில் ஊழல் நடந்திருப்பதாக அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த உறுப்பினரின் நிறுவனம்  அரசாங்கத்திற்கு விற்கப்பட்ட மாஸ்கில்  250,000  யூரோக்களை லாபம் சம்பாதித்ததாக  அவர் மீது குற்றம் சாட்டினர். இதன் காரணமாக  கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதனால் அந்த கட்சியின் மற்ற தலைவர்கள் அவரை பதவியை  விட்டு விலக வேண்டுமென்று கூறினர் .இதைத்தொடர்ந்து என்னால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதால் நான் பதவி விலகப் போவதாக லோபெல் அறிவித்தார். இதனால்  ஜெர்மனியில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் , இவ்வாறு உறுப்பினர்கள் ஊழல் புகார்களில் சிக்கியிருப்பது  அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

Categories

Tech |