ஜப்பானில் கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யப்போவதாக பொதுச்செயலாளர் டோஷிஹிரோ நிக்காய் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூலை 23 தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இதில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜப்பானில் 5,13,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 0. 4% பேருக்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாட்டிலே டோக்கியோவில் தான் 1,26,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இவ்வாறான சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதால் கொரோனா பரவல் இன்னும் அதிகரித்து நாடு மோசமடைய வாய்ப்புள்ளதால் ஒலிம்பிக்கை நடத்த கை விடுவதை தவிர வேறு வழி இல்லை என்று லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பொதுச்செயலாளர் டோஷிஹிரோ நிக்காய் தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பான் மக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்று கியோடோ நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர் .