ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்தது நிலையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தானில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு நடக்கும் போட்டியின் உரிமத்தை வைத்திருந்தாலும் இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த ஆண்டு விட்டுக்கொடுத்து அடுத்த ஆசியா கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாக்கிஸ்தான் பெற்றுக்கொள்வதாக செய்திகள் வந்துள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி பேசுகையில், செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான இசான் மணி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியானது கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடபட்டிருந்த நிலையில் இப்போட்டியை தள்ளிவைப்பது பற்றிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .