கொரோனா தனிமை முகாம்களில் அடிப்படை வசதி இல்லாமல் கழிவறை துர்நாற்றம் வீசுவதாக அங்கு தங்கியிருந்த மாணவி கூறியுள்ளார்.
சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள தனிமை முகாம் ஒன்றில் கடந்த மாதம் தங்கியிருந்த லியோனா செங் என்ற 20 வயது மாணவி கூறியதாவது ” கொரோனா நோயாளிகளால் அரங்கமே நிரம்பி வழிந்தது. அங்குள்ள அத்தனை பேருக்கும் தேவையான அளவு தண்ணீர் வரும் வகையில் நிரந்தர குழாய் இணைப்புகள் எதுவும் இல்லை.
இதனை அடுத்து சிறிய அளவிலான போர்ட்டபிள் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலைமை இருந்தது. மேலும் மனிதக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால் கழிவறைக்கு போகாமல் தவிர்ப்பதற்காகவே சில நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்தும் கூட கழிவறை துர்நாற்றத்தால் தூங்க கூட முடியவில்லை என்றும் அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.