கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், தற்போது அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசி வயதானவர்கள் இடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஜெர்மனியில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இந்த வருடம் தயாராக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேபோல லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ்க்கான நோய் எதிர்ப்பு சக்தி ஒரு மாதத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
இதன் காரணமாக வெற்றிகரமாக தடுப்பூசி கண்டுபிடித்தாலும் அது வருடத்திற்கு இரண்டு முறை போட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை பரிசோதிக்கும் நிலையில் சீனா மட்டும் முன்னேறி வருகிறது. ஜெர்மனியில் தடுப்பூசி கிறிஸ்துமஸுக்கு முன்பு கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான Pfizer தலைமை நிர்வாகி கூறியுள்ளார். இதனையடுத்து 40 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் பிரிட்டனுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.