Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட… அரை மணி நேரத்தில்…. பெண் மருத்துவருக்கு நேர்ந்த நிலை…!!

பெண் மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் உடல்நிலை மோசமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோவை சேர்ந்த மருத்துவரான 32 வயது பெண் ஒருவருக்கு கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, அந்த பெண் மருத்துவருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் கழித்து தசை பலவீனம் மற்றும் சுவாச கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்த பக்க விளைவுகள் குறித்து ஆய்வுகள்  செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் அவருக்கு என்செபலோமைலிட்டிஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் சிகிச்சைக்குப் பின்பு அவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பெண் மருத்துவருக்கு பிற மருந்துகளை எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் பாதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |