Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் தங்கம், மிக்ஸி, புத்தாடை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்ற தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக ஒரு கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக மிக்ஸி, மூன்றாம் பரிசாக காய்கறி கட்டர், நான்காம் பரிசாக 4 பேருக்கு புத்தாடை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதனால் மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |