கடந்த இரண்டு வருடமாக நாடு முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கார்டு கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள அட்டை இல்லாமல் 87 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.