Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு… இந்தியாவுடன் கைகோர்க்க விரும்பும் ரஷ்யா…!!!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா விருப்பம் காட்டியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்த மருந்தை தனது மகளுக்கு செலுத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஸ்புட்னிக் வேக்சின் மருந்து குறித்த அடிப்படை விவரங்களை ரஷ்யாவிடம் இந்தியா கேட்டுள்ள நிலையில், அதற்கான தூதரக பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பெரிய அளவில் உற்பத்தியில் மருந்து தயாரிப்பிற்காக இந்தியாவின் பங்களிப்பை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. கொரோனா வைரஸ் தடுப்பூசி ‘ஸ்புட்னிக் 5’ தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரசியா முன்வந்துள்ளதாக ரஷ்ய நேரடி முதலீடு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” லத்தீன், அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றன.

தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி உற்பத்தி மிக முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது நாங்கள் இந்தியாவின் பங்களிப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் அதிகம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இது போன்ற நோய்த் தடுப்பு மருந்துகளை அதிக அளவு தயாரிப்பதில் இந்தியா மிகுந்த திறன் கொண்ட நாடு என்பதால், சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர் நோக்கியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் நட்புறவில் இருந்துகொண்டிருக்கும் ரஷ்யாவிடம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |