கொரோனா தொற்றுக்காக மக்களுக்கு செலுத்திக் கொண்டு வரும் தடுப்பூசியின் பாதுகாப்பு நலனை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.
கொரோனாவிற்க்காக செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பாதுகாப்பு அம்சங்களை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறும்போது இந்த தடுப்பூசி செலுத்துபவர்கள் 8 முதல் 10 மாதங்கள் வரை கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் . கொரோனா நாட்டில் பரவி வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும் கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று மக்கள் நினைப்பது தான் முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமாக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.