வேலூர் மாவட்டத்தில் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தமிழக முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று 35 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 788 இடங்களில் இந்த சிறப்பு முகமானது நடந்தது. இதுபற்றி பொதுமக்களிலேயே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை பெரும்பாலானோர் செலுத்தி இருக்கின்றார்கள். இந்த சிறப்பு முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்தப் பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3940 பணியாளர்கள் ஈடுபட்டார்கள் என கூறியுள்ளார்.