தமிழகத்தில் 85 % பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுதும் இன்று 1,00,000 மையங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் நடந்து வரும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டுவரும் தடுப்பூசி முகாம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா இறப்புகள் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையால் 85 % பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.