Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி… இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.  சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

தற்போது இந்தியா முழுவதிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கும், அதன்பிறகு பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 6 லட்சம் களப்பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறது. மேலும் தமிழகத்தில் முதல் கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |