மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட போது அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார் . பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசியை தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தது நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

பாஜக வின் இந்த தேர்தல் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக தான் வழங்கப்பட வேண்டும் . அதை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை ஆகும். ஏனெனில் அனைத்து மக்களுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்”. என்று குறிப்பிட்டுள்ளார் .