உலகின் மிகப்பெரிய நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதனால் கொரோனா தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 5 ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஆனால் அதிக விலை மற்றும் -70 டிகிரி செல்சியஸில் வைக்கவேண்டிய நிலை காரணமாக அந்த தடுப்பூசியை இந்தியா வாங்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஐந்து நாடுகளில் அவசரகால அனுமதிக்கான ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்க, ஊசி ஒன்றுக்கு ரூ.2,728 தர வேண்டியுள்ளது. ஆனால் இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்படும் தடுப்பூசியின் விலை ரூ.737 என்பதால் பைசர் தயாரிக்கும் தடுப்பூசியை இந்தியா வாங்காது என கூறப்படுகிறது.