ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி நிர்வாக தலைவர்கள் கொரோனா தடுப்பூசிகளை ரஷ்யாவிடம் கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர்.
ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளுக்கு ஜெர்மனி,அயர்லாந்து ,ஹாலண்ட் உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்ததால் ஐரோப்பிய ஒன்றிய தடுப்பபூசி நிர்வாகத் தலைவர்கள் ரஷ்யாவிடம் தடுப்பூசி கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எல்லாம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகளில் தயாரித்து செலுத்தி தற்போதைய சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர். முதன்முதலில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா தான்.
ஆனால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மற்ற நாடுகள் இது நம்பகதன்மை உடையது தானா? என்றெல்லாம் கூறி கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமே தங்களுக்கு தடுப்பூசி வேண்டும் என்று கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரிட்டனின் தடுப்பூசி செலுத்தியதால் சிலருக்கு ரத்தம் உறைந்தது மற்றும் சிலர் அதனால் இறந்து போனதால் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்துவதை தடுத்து நிறுத்தினர்.
அதனால் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகள் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளனர். மேலும் அதனை ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.