அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்ற அச்சத்தால் பல நாடுகள் அதன் பயன்பாட்டை குறைத்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த தடுப்பூசியை போட்டு கொள்வோருக்கு கேப்பில்லரி எனப்படும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவு ஏற்படுகிறது என்றும் கவனிக்காமல் விட்டால் உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் 30 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இதுவரை மூன்று பேருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்று ஐரோப்பிய மருந்து ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி இரத்த உறைவுகளுடன் இரத்ததட்டுக்கள் குறைவு பிரச்சனையும் ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் இதுவரை 18 பேர் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.