கொரோனா தடுப்பு மருந்து கட்டாயம் 50% நல்ல செயல் திறனைக் கொண்டு இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்துகள் குறைந்த பட்சம் 50 விழுக்காடு செயல்திறனைக் கொண்டிருக்க வேண்டும் என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பாற்றல், செயல் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமாக ஒரு தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கு அது 3 ஆம் கட்டச் சோதனையில் குறைந்தது 50 விழுக்காடு செயல் திறனை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் எனவும் குறப்பிட்டுள்ளது. மேலும் இந்த மருந்தானது பெண்கள், பேறுகாலத்தை எதிர்நோக்கியுள்ள பெண்கள், மற்றும் முதியவர்கள் ஆகியோரின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.