சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பல மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்தவகையில் சிக்கிம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளது.அதன்படி,
*அனைத்து கல்வி நிறுவனங்களும் வழிகாட்டு விதிமுறைகளுடன் செயல்பட வேண்டும்.
*சமூக, அரசியல், மத மற்றும் விளையாட்டு தொடர்பான கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
*கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்.
*மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் அரசின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து செயல்படலாம்.
*இதனை அடுத்து மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், நிறுவனங்கள் போன்ற அனைத்து மாநில அரசு அலுவலங்களிலும் நூறு சதவீத வேலையாட்களுடன் கடும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.