Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில் பாடுபட்ட செவிலியர்…. குடிமை உரிமம் வழங்க மறுத்த அரசு…. காரணம் இதுதானா….?

பிரான்ஸ் அரசு கொரோனா நெருக்கடியில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட செவிலியருக்கு குடிமை உரிமம் தர மறுத்துள்ளது.

மாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த 20 ஆண்டுகளாக  பாரிஸில் உள்ள மருத்துவமனையில் முழு நேரமும் அருகிலுள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் பகுதி நேரமும் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டின் குடிமை உரிமம் பெற விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடிமை உரிமம்  மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. அதில் பிரான்ஸில் ஒருவர் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும். ஆனால் அவர் ஒரு வாரத்திற்கு  இரண்டு மருத்துவமனைகளில் வேலை செய்ததால்  60 மணி நேரம் வேலை செய்துள்ளார். இதனால் அவரது குடியுரிமை நிராகரிக்கப்பட்டது என கூறியது.

ஆனால் பிரான்ஸ் அரசு தற்போது கொரோனா நெருக்கடியை சமாளிக்க மார்ச் மாதத்தில் புதிய விதி ஒன்றை அமல் செய்தது. அதில் ஒருவர் ஒரு வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. எனவே அவர் செவிலியர் விதிகளுக்குட்பட்டு தான் பணி செய்துள்ளார் எனவே அவரது விண்ணப்பத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவரது தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குடியுரிமை அமைச்சர் Marlene schiappa கொரோனா காலகட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட பணியாளர்களுக்கு குடிமை உரிமம் விண்ணப்பம் வேகமாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது விண்ணப்பம் விரைவாக பரிசீலினை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |