மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பாராட்டியுள்ளார். மேலும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் சுகாதாரம் தடுப்பூசி இயக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டி பேசி உள்ளார். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் பல விஷயங்களை சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியா ஆக்ஸிஜன் தயாரிப்பில் தீவிரம் காட்டியதால் பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
Categories
“கொரோனா காலத்தில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது”… பில்கேட்ஸ் பாராட்டு…!!!!!
