Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. 50% ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்துத் துறையும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பல வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக 50% ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |