நாட்டு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாளு நாள் இறப்பு விதங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அவகாசம் மே மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. வருமான வரித்துறையின் நோட்டிஸ் பெற்றவர்களும் இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யலாம்.