கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் 21ஆம் தேதி வரை தளர்வுகளை ரத்து செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் கூட்டம் கூடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரை ஆகஸ்ட்-15 இல் தொடங்குகிறது கூட்ட நெரிசலை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 15,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.