கொரோனா காரணமாக தமிழகத்தின் முக்கிய கோவில்களில் மூடப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தியுள்ளது. முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. முக்கிய கோயில்களை மூடுவதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்கள் மூடப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள சுற்றுலாத்தலங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் இன்றி கோயில்களில் பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.