Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அம்மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 9,085 ஆக உயர்திருக்கிறது. இதையடுத்து தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் அல்லது 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், பயிற்சி வகுப்புகளையும் மூடவும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ, கான்பூர் மற்றும் வாரணாசி ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 8 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

Categories

Tech |