Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”… பிப்ரவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி….!!!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவி வரும் கொரோனா தொற்று பரவலானது ஒரு சில மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் உச்சமடைந்து மீண்டுமாக சரியத் தொடங்கி இருக்கிறது. இதன் மூலமாக ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அம்மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் தற்போது உள்ள நோய் தொற்று நிலைமையை ஆய்வு மேற்கொண்ட அரசு கொரோனா தடுப்பு குறித்த கட்டுப்பாடுகளை பிப்ரவரி 10 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ஹரியானா மாநிலத்தின் தலைமைச் செயலாளரான சஞ்சீவ் கௌஷால் பிறப்பித்துள்ள புதிய உத்தரவில் “மாநிலம் முழுவதும் ஊரடங்கு தடைகள் நீட்டிக்கப்பட்ட நிலையில் வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் இரவு 7 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

அதே சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே கட்டுப்பாடுகள் இன்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மக்களின் வசதிக்காக இந்த செயல்பாடுகளுக்கான நேரம் தளர்த்தப்பட்டிருந்தாலும் தொற்று பரவுவதை தடுக்க அவர்கள் கண்டிப்பாக கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் ஹரியானா மாநில அரசாங்கம் விதித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி,

# மால்கள், சந்தைகள் இரவு 7 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

# பால் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் உள்ள கடைகள் எப்போதும் திறந்திருக்கலாம்.

# திரை அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

# விளையாட்டு வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், மைதானங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

# இருந்தாலும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக (அ) தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள் திறக்கப்படலாம்.

# துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

# அதேபோன்று திருமணங்களில் 100 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி.

# இரவு ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

# அனைத்து பார்கள் மற்றும் உணவகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |