Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!… தமிழகத்தில் மீண்டும் அமலாகுமா ஊரடங்கு?…. அமைச்சர் கொடுத்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் சென்ற சில வாரங்களாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாள் மட்டும் 2,448 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 796 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையானது 18,802 ஆக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கு மத்தியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்களாக அவருக்கு சோர்வு இருந்த நிலையில் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். இப்போது தொற்றை கட்டுப்படுத்தும் பணியாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதுவரை தமிழகத்தில் 94.68 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85.74% பேர் 2ஆம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று மாநிலம் முழுதும் 31வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது அமைச்சரிடம் ஊரடங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கொரோனா பரிசோதனையில் 10 சதவீதம் பேருக்கு அதிகமாக தொற்றுஉறுதி செய்யப்பட்டாலோ 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக தொற்று பரவல் இருந்தாலோதான் ஊரடங்கு கட்டாயம். இப்போது தமிழகத்தில் 5 % பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஊரடங்கு தேவையில்லை என கூறியுள்ளார். அத்துடன் தடுப்பூசியின் எதிரொலியாக 88% பேருக்கு நோய்எதிர்ப்பு திறன் அதிகரித்துள்ளது. மேலும் இனி பூஸ்டர்தடுப்பூசியும் விரைவில் செலுத்தப்படும் என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |