Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை நாளையுடன் முடிகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் 31ம் தேதியோடு முன்கூட்டியே முடிக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

எனினும் மக்களை கூட்டம் கூட்டக்கூடாது என கூறிவிட்டு நாம் ஒன்றாக அமர்ந்து விவாதிப்பது சரியல்ல என்பதால் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என திமுகவினர் கூறிவந்தனர். ஆனால் இன்று வழக்கம் போல சட்டப்பேரவை தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பு சட்டப்பேரவையை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்து அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஆளுங்கட்சி தரப்பில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அனைத்து சட்ட முன்வடிவுகளும் நாளை ஆய்வுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும். நாளை வினாக்கள் விடைகள் நேரம் கிடையாது என்றும் அனைத்து மானிய கோரிக்கைகளும் நாளை எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |