திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்கள் மறைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் இன்று காலை ஸ்ரீரங்கம் தனியார் மருத்துவமனையில்கொரோனாவால் இறந்தவர் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றினர். அந்த காட்சியை அருகில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து வீடியோவாக ஒருவர் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு தமிழக அரசின் மீது பல்வேறு சந்தேகங்களையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இன்று வைரஸ் தொற்றால் இறப்பு இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்படி என்றால் அவர் எப்போது இறந்தார். நேற்று இறந்திருந்தால் ஆஸ்பத்திரியில் பிணத்தை பாதுகாத்து வைக்க கூடிய பிணவரை இல்லாமல், கொரோனாவில் இறந்தவர் உடலை எங்கே வைத்திருந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் இல்லையா என்று ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர். அரசு தினம்தோறும் உண்மையான அறிக்கையை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் பொதுமக்கள் மத்தியில் அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் எனவும் திருச்சி மாவட்ட பொது மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல அரசு மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை மட்டுமே இறப்பு அறிக்கையில் குறிப்பிடுவதாகவும் , தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பவர்களின் விவரத்தை அரசு மறுப்பதாக கூறப்படுகிறது.