Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத கர்ப்பிணியை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயற்சி ….!!

கன்னியாகுமரியில் கொரோனா இல்லாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சுகாதாரத்துறை குழுவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த உள்ள மணிக்கட்டுப்புட்டால் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான திருமதி ரூபிகாவுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை குழுவினர் கூறியுள்ளனர். எனினும் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் தனக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக சான்றிதழ்களை ரூபிகா காண்பித்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த சுகாதாரத்துறை குழுவினர் ரூபிகாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அமமுக-வை சேர்ந்த திரு.அன்ரோ திரு.ராகவன் உள்ளிட்டோர் வந்து சுகாதாரத்துறை குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Categories

Tech |