தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகங்கள், அங்காடிகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டம் கூடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், பொது இடங்களில் பொது மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.