2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தனது கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு பல இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள வேலை விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் 2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் எச்டிஎஃப்சி வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆன மாணவர்களை இது குறிப்பதாக சொல்லப்படுகின்றது. இதைப் பார்த்த இளைஞர்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.