ஸ்விட்சர்லாந்தின் பல இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள பல இடங்களில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குளோபல் சுகாதார அமைப்பு, ஜெனிவா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், இன்னும் சிறிது நாட்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும்.
ஆனால் பாஸல்,சூரிச்,பெர்ன் போன்ற பகுதிகளில் கொரனோ பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என தெரியவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லவாய்ஸ் என்ற மண்டலத்தில் ஊரடங்கு இன்றும் சில விதிவிலக்குகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இங்கு கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது. இதன்படி, “சில கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வந்தால் கொரோனா தாக்கத்தை முற்றிலுமாக ஒழித்துவிடலாம்” என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார்.