சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்திற்குள் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலை அடையச் செய்திருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர் டாக்டர் ஜெயபிரகாஷ் முளியில் கூறும்போது, இது ஒரு திடீரென ஏற்பட்ட மாற்றம். அதுவும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பாதிப்புதான். எனவே இதை வைத்து மட்டும் அடுத்த அறை உருவாகும் என கூறிவிட முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் இதே கருத்தை தான் பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பேராசிரியர் கே எஸ் ரெட்டியும் கூறியுள்ளார். அடுத்த அலை உருவாகும் என்று இவ்வளவு விரைவாக கூறிவிடமுடியாது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒட்டுமொத்த மக்களும் சுதந்திரமாக வெளியே வருகின்றார்கள். அப்போது ஒரு திடீர் அதிகரிப்பு இருக்கத்தான் செய்யும் என கூறியுள்ளார். அதேவேளையில் ஐஐடி கான்பூர் ஜூன் மாத இறுதியில் நாட்டில் 4வது அலை உருவாகும் எனவும், ஆகஸ்ட் மாதத்தில் தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் பல நாடுகளிலும் இப்படி எண்ணிக்கை சற்று அதிகரித்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. எனவே சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என ஐஐடி கான்பூர்ரை சேர்ந்த டாக்டர் அகர்வால். மேலும் இந்தியாவில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 1,000 முதல் 1,200 வரை புதிய பாதிப்பு பதிவாகி வருகிறது. சில மாநிலங்களில் 100 முதல் 150 நோயாளிகள் நாள்தோறும் புதிதாக பதிவாகின்றன. இது குறைந்தபட்ச எண்ணிக்கை தான் எனவே நாம் தற்போது அச்ச உணர்வை ஏற்படுத்த கூடாது என கூறியுள்ளனர்.