கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் அடித்து கொல்லப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் இதுவரையில் இறந்துள்ளனர். மேலும் 75000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே அந்நாட்டு மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளும் தனிமைபடுத்தப்பட வேண்டும் என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து பூனை மற்றும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளிலிருந்தும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தநிலையில் பெங்கன் கவுண்டி என்ற இடத்தில் அரசு ஊழியர்கள் நாய்களையெல்லாம் அடித்துக் கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. விலங்குகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த வித சான்றும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிதுள்ள நிலையில் இப்படி நிகழ்ந்திருப்பது வேதனையளிக்கிறது.