மாமியாருக்கு கொரோனா உறுதியானதால் பயத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பெண்ணொருவருக்கு கொரோனாதொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் தனது கணவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று பயந்து உள்ளார்.
இதனால் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தனக்கும் கொரோனா இருக்கும் என்ற அச்சத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொற்று குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை மக்கள் உணரவேண்டும். தொற்றில் இருந்து விடுபட்டு வந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.