Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சத்தை உணராமல் விளையாட்டில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் …!!

சென்னையில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள் அதிக அளவில் குவிந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 10 நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 1,400 என்ற அளவில் இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஏற்கனவே அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு முக்கிய தளர்வாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் இறைச்சி கடைகள் பொது இடங்கள் மட்டுமின்றி விளையாட்டு மைதானங்களிலும் தற்போது மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூட்டமாக விளையாடி வருகின்றனர். சென்னையின் பிற மைதானங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இதனால் சென்னையில் கொரோனா தொற்று பரவும் ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |