கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹாச்வரதன் வெளியிட்டரர். அந்த ஆவணத்தில் கொரோனா வைரஸை தடுக்கவும், அதன் வீரியத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அஸ்வகந்தா, குடுசி கானா வடி, சவனபிராசா போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு குடுசி கானா வடி, பிப்பாலி அல்லது ஆயுஷ் 64 மருந்துகளை அழித்தால் தொற்று தீவிரம் அடைவதை தடுக்கலாம் என்றும் லேசான பாதிப்பு இருப்பவர்களுக்கும் இவற்றைக் கொடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா குணமடைந்த பிறகு நுரையீரல் கோளாறுகள், தலைசுற்றல், மனநிலை பாதிப்பு போன்றவற்றை தடுப்பதற்காக அஸ்வகந்தா, சவனபிராசா, ரசாயனா சூர்ணா ஆகிய மருந்துகளை உட்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெதுவெதுப்பான நீரில் உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம். தினமும் ஒருமுறை புதினா அல்லது யூகலிப்டஸ் ஆயிலை பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் இஞ்சி, கொத்தமல்லி, துளசி, சீரகம் ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். இரவு நேரத்தில் சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து பருகலாம். மிதமான உடற்பயிற்சி, யோகாபயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.