நாட்டில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து மாநிலங்களும் பல வித கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கடந்த 14-ஆம் தேதி நிலவரப்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அருணாசல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பீகாா் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தடை உத்தரவு அமலில் உள்ளது.சத்தீஸ்கா் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோவா விழாக்களில் 50% போ் மட்டுமே அனுமதிக் கப்பட்டுள்ளனர்.குஜராத் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை உத்தரவு அமலில் உள்ளது.
ஹரியாணா இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரைஜாா்க்கண்ட் இரவு 8 மணிக்குப் பிறகு கடைகள் மூடப்படும்
கா்நாடகம் வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை தடை அமலில் உள்ளது.
கேரளம் பொது நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டும் அனுமதி.மத்திய பிரதேசம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை உத்தரவு. மகாராஷ்டிரம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.மணிப்பூா் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
நாகாலாந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒடிஸா இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை சிக்கிம் உணவகங்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே உணவருந்த வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. தெலுங்கானாவில் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரவு 9 மணி முதல் 5 மணி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது லட்சத்தீவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் தாத்ரா நகர் ஹவேலி டாமன் டையூ கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது.