Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு… “வெறிநாய் கடி எதிர்ப்பு தடுப்பூசி”…. போட்டதால் அதிர்ச்சி!!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ஒருவருக்கு ரேபிஸ் நோய்த்தடுப்பூசி போட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா என்பது தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது. இதனால்  மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.. அந்தந்த மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் என்ற சுகாதார மையம் இருக்கிறது. இந்த மையத்தில் கொரோனா வைரசுக்கு  எதிரான தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகின்றது. அதே போல பல்வேறு நோய்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ்குமார் யாதவ் என்ற நபர் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சென்றிருக்கிறார்.. அப்போது அங்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அவர், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இடம்தான் என்று நினைத்து நின்றுள்ளார்..

பின்னர் அவருக்கு அங்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. அதன் பிறகு தான் தெரிய வந்தது, அது கொரோனா தடுப்பூசி இல்லை.. வெறிநாய் கடி எதிர்ப்பு தடுப்பூசி செலுத்த வந்தவர்களின் வரிசை  என்று. இதனால் அவர் பெரும் அதிர்ச்சி அடைய, இந்த தகவல் மேலதிகாரி வரை சென்றது.
இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர், செவிலியர் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்.. அலட்சியத்தால் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |