கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவது மக்கள் கைகளில் உள்ளது என்று டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார் ..
பெர்லினில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியசஸ் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது, கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான ஆயுதங்கள் மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும், ஆனால் மக்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் பயனளிக்கக்கூடிய பொது சுகாதார கட்டுப்பாட்டு வழிமுறைகள், திறமையான மருத்துவ வசதிகள் இருந்தாலும், உலக மக்கள் அவற்றை முழுமையாக பயன்படுத்த முன்வரவில்லை என்று அவர் வருத்தத்தில் கூறியுள்ளார். இந்தக் கொரோனா தொற்றினால் வாரம் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
ஆனால் இந்த நிலையில் இப்போதைக்கு கொரோனா தொற்று ஓய்ந்து விட்டது என கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.. மேலும் இதனை கட்டுப்படுத்த இரத நாடுகளை விட்டுவிட்டு எந்த நாடும் தனிப்பட்ட வகையில் அவற்றிலிருந்து விடுபட இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்…