சூரியசக்தி பயன்பாடு பிரபலம் அடைந்ததற்கு இந்தியா நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
தூய்மையான எரிசக்தியை மாற்ற உச்சிமாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோணியோ குட்ரெஸ் பல கருத்துக்களை கூறியுள்ளார். சர்வதேச சமூகத்தின் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதிலும் வளர்ந்து வரும் நாடுகளில் நிலக்கரியின் வெளிப்புற நிதியுதவிக்கும் தீர்வு காண வேண்டும். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் நிலக்கரி பிரச்சனைக்கு தீர்வு காண்பது கடினம். நிகர பூஜ்ஜிய உணர்வுகளுக்கு 2050 ஆம் ஆண்டுக்குள் உறுதி கூற வேண்டும்.
மேலும் அதிக லட்சிய தேசிய காலநிலை திட்டத்தை அடுத்த ஆண்டு கோப்-26க்கு முன்னரே தீர்ப்பது மிகவும் அவசியம்.மாற்றத்திற்கான விதைகள் அனைத்தும் உள்ளது.புதுப்பிக்கத்தக்க ஆற்றலே 2020 ஆம் ஆண்டில் வளரும் என்பது எதிர்பார்க்கத்தக்கது.உலக நாடுகளின் நோய்த்தொற்றின் மத்தியில் சூரியசக்தி பெரும் பயன்பாடு அடைந்துள்ளது. இந்தியாவே இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு புதைபடிவ எரிப்பொருளை விட சூரியசக்தி மூன்று மடங்கு அதிக வேலைகளை வழங்குகிறது என்றும் அன்டோணியோ குத்ரெஸ் கூறியுள்ளார்.