Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிவப்பு எறும்பு சட்னி… உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!!

கொரோனாவுக்கு மருந்தாக சிவப்பு எறும்பு சட்னியை பரிந்துரைக்க வேண்டிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் தடுப்பூசி போடும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எரும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். சட்னியுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதனை பயன்படுத்துகின்றனர். மேலும் ஒடிசாவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார். அவரும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.

அவர் தனது மனுவில் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் அதிகம் இருப்பதாகவும், இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், கொரோனாவை தடுக்கும் மருந்தாகப் பரிந்துரைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு பாரம்பரியமாக கொரோனாவிற்கு நிறைய மருந்துகள் உள்ளது. அவற்றை எல்லாம் மருந்தாக பயன்படுத்த முடியாது. சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். ஆனால் நாடு முழுவதும் இதனை பயன்படுத்துவது என்பது முடியாத காரியம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். அதுமட்டுமில்லாமல் மனுதாரர் கட்டாயம் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Categories

Tech |