Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிறந்த மருந்து… இது மட்டும்தான்… அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்…!!!

டெல்லியில் கொரோனா நோயை விரட்டியடிக்க முக கவசம் மட்டுமே மிக சிறந்த மருந்து என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கொரோனாவின் இரண்டு அலைகளை டெல்லி மக்கள் விரட்டி விட்டனர். ஆனால் கொரோனா மூன்றாவது அலையில் சிக்கியுள்ளனர். இதனை மிக விரைவில் கடந்து விடுவார்கள். இந்த கொடூர கொரோனா பொருளாதாரம், பாலின மற்றும் வயது என்ற எந்த வேறுபாடும் காட்டாமல் அனைவரையும் தாக்கி வருகிறது.

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வைக்க வில்லை என்றால் அது கட்டாயம் மரணத்திற்கு வழிவகுக்கும். அதனால் மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது மிகவும் அவசியம். அதுதான் இதற்கு உரிய மருந்து. நோய்க்கு மருந்து கண்டறியும் வகையில் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |