கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி.
இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் செயலால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கொரோனா பாதிப்பில் உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் இந்திய அளவில் 610 டாக்டர்களும், தமிழக அளவில் 67 டாக்டர்களும் பலியாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.