Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

கொரோனாவில் இருந்து விடுப்பட்டேனா…?? மறுப்பு தெரிவித்த அமிதாபச்சன்…!!

 பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன்  தான் குணமாகிவிட்டதாக  சமூக ஊடகங்கள் மூலம் பரவிய செய்தி தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு  11ம் தேதி அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அபிஷேக் பச்சனின் மனைவி, நடிகை ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யா, ஆகியோருக்கு பாதிப்பு உறுதியானது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்தனர்.

அதன்பின் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன், அவரது மகன் மருமகள், பேத்தி ஆகிய நான்கு பேரின்  உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் சார்பில் சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. அமிதாப் பச்சனின் உடல்நிலை சரியாகி குணமாகிவிட்டதாக தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ” இந்த  செய்தி தவறானது, போலியானது நான் இன்னும் தொற்றிலிருந்து விடுபடவில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |