இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோஸ் இந்தியா கொரோனாவிற்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. ரோக்சின் ஆன்டிபாடி காக்டெயில் என அழைக்கப்படும் இந்த மருந்தை பயன்படுத்தி கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை ரூ.59,750. இரண்டு டேஸ் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.1,19,500 என விற்பனை செய்யப்படுகிறது.