நாகையில் நடைபெறுகின்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அந்த முகாமை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார். தனியார் பேருந்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் முன்னுரிமையின் அடிப்படையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதி திராவிடர் நலத்துறை ஆணையருமான முனியநாதன் கூறினார்.